2025 மே 02, வெள்ளிக்கிழமை

எல்லைகளை வரையறை செய்யுமாறு கோரிக்கை

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டு. மாவட்ட எல்லைக் கிராமங்களின் எல்லைகளை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் இரு சமூகங்களிற்கு இடையிலான முரண்பாட்டினை தடுக்கும் முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மாவட்ட செயலாளர் தலைமையில் விசேட குழு அமைத்து வர்த்தமானி பிரசுரத்தில் உள்ள பிழைகளை திருத்தி எல்லைகளை வரையறை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொது நிருவாக அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதி மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X