2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாகரை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாகரை பொலிஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டும் தீபாவளியை முன்னிட்டும் வாகரை பொலிஸாரால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஓர் நிகழ்வாக மீள்குடியேற்றக் கிராமமான வெருகல் - திக்கான கிராமத்திரல் உள்ள மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கான மதிய உணவும் வழங்கப்பட்டது.

வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.பீ.கே.பாலித ஜெயரத்ன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கடந்தகால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் 19 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X