2025 மே 02, வெள்ளிக்கிழமை

கம்பியாறுக்கு குறுக்காக பாலம் அமைக்கும் பணிகள் துரிதம்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மிகவும் பிரசித்திபெற்ற ஆறாகவுள்ள கம்பியாறுக்கு குறுக்காக பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 29.37 மில்லியன் மதிப்பீட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இந்த பாலம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வெள்ள அனர்த்த காலங்களில் இந்த ஆற்றின் ஊடாக வெள்ளம் அதிகளவில் பாய்வதனால் மண்டூரில் இருந்து காக்காச்சிவட்டை, ஆனைகட்டியவெளி, பலாச்சோலை, நெடியவட்டை, சின்னவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த காலத்தில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் இது தொடர்பிலான செயற்றிட்ட அறிக்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் இந்த பாலம் அமைப்பதான நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இந்த பாலத்தின் ஆரம்ப பணிகள் அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து நீர் பாய்ந்து கொண்டிருக்கும் இக்கம்பியாற்றினைக் கடப்பதற்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதனால் நீரில் நீந்தியே மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இப்பாலம் நிறைவடைகின்ற நிலையில் இவ்வாறான போக்குவரத்துக்களும் ஆபத்துக்களும் இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X