2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாகரை பிரிவில் இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 05 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'இலங்கையில் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில்தான் இலத்திரனியல் அடையாள அட்டையினை ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளோம்' என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.

'தேசிய அடையாள அட்டை என்பதனை தமக்கு அரசாங்கம் வழங்காது என்ற ஒரு அபிப்பிராயம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மத்தியில்; காணப்பட்டது. இதுபோன்ற எண்ணங்களை இல்லாதொழிப்பதற்காகத்தான் நாங்கள் இலங்கையில் முதன்முறையாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்திலும் இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் காரியாலயங்களைத் திறந்துள்ளோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தேசிய இலத்திரனியல் அடையாள அட்டை வழவங்குவதற்காக துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு சத்திருக் கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய கேட்போர் கூடத்தில் தேசிய ரீதியில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'இலங்கையில் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில்தான் இலத்திரனியல் அடையாள அட்டையினை ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளோம்.

இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டதில் இருக்கின்ற 14 பிரதேச செயலகங்களுக்கும் சென்று அறிவூட்டும் நிகழ்வகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

புதிதாக தேசிய அடையாள அட்டை பெறுபவர்கள் இந்த இலத்திரனியல் அடையாள அட்டையினைப் பெறலாம். தற்போதிருக்கின்ற அடையாள அட்டையினை வைத்திருக்கின்ற எனைய யாவரும் இந்த புதிய இலத்திரனியல் அடையாள அட்டையினைப் மாற்றிக்கொள்ள வேண்டும்' என அவர் தெரிவித்தார்.(படங்கள்: ஏ.எச்.ஏ.ஹுஸைன்)




You May Also Like

  Comments - 0

  • Pathmadeva Tuesday, 05 November 2013 04:45 PM

    ஆட்பதிவுத் திணைக்களத்திலே பணிப்பாளர் என்று ஒரு பதவியே கிடையாதே! பணிப்பாளர் எங்கிருந்து வந்தார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X