2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'படம் பிடிக்கும் கும்பல் குறித்து பெண்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்'

Kogilavani   / 2013 நவம்பர் 05 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

'குளியலைறை போன்ற இடங்களில் வைத்து படம் பிடிக்கும் கும்பல் குறித்து பெண்கள் அக்கறையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்' என மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவரும், பிரஜைகள் குழுவினுடைய தவைருமாகிய வ.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தனிமையில் இருக்கும் பெண்களை குளியலறை போன்ற இடங்களில் வைத்து வீடியோக்கமராக்கள் மூலம் படம்பிடிக்கும் செயற்பாடுகள்; அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகின்றது.

இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள், பெண்களை அச்சத்துக்குள் தள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குறித்து பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

வெளி இடங்களிலிருந்து மட்டக்களப்புக்கு வருகைதந்து விடுதிகளில்; தங்கியிருக்கும் ஒரு சிலரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே குளியலறை போன்ற இடங்களைப் பாவிக்கும் போதும், தனிமையில் கல்வி கற்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் பாதுகாப்பான நடைமுறைகளைக் கையாள்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறன படப்பிடிப்புக்கள் நடைபெற்றுள்ளமை குறித்து தமக்குக்கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தான் இந்த தகவவை வெளியிடுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளைத்
தான் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .