2025 மே 02, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீடு

Super User   / 2013 நவம்பர் 05 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தனத நாடாளுமன்ற பன்முகப்படுத்த நிதியான 49 இலட்சத்து 20,000 ரூபாவை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 52 திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஏறாவூர், கோறறைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, கிரான், ஏறாவூர் பற்று, மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று களுவாஞ்சிகுடி மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கும் மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவிற்கும் இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

இதேபோன்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதி 56 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் காத்தான்குடி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, ஏறாவூர், மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று, போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலகங்களிற்கும் மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவிற்கும்  நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X