2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யானைகளை விரட்ட மின்சார வேலி அமைப்பது பொருத்தமற்றது: ந.வில்வரெத்தினம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


'பிரதேச குடியிருப்புக்களுக்குள் ஊடுருவியிருக்கும் யானைகளை பிடித்துக் கொண்டு அவைகள் வாழும் சரணாலயங்களில் விட வேண்டும் இதனை செய்யாமல் மின்சார வேலி அமைப்பது என்பது பொருத்தமற்றது' என போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இன்று (07) அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முன்னாயர்த்த ஆலோசனைக் கூட்டம் போரதீவுப்பற்று பிரசேத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூடத்தில் தலைமை வகித்து பேசுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'போரதீவுப் பற்று பிரதேசத்தில் முன்னர் யானைகள் புகுந்துள்ளது என்றால் அதனை பார்ப்பதற்கும் துரத்துவதற்குமாக மிகவும் விறு விறுப்புடன் ஓடுவோம் தற்போது அனைவரும் அடிக்கடி தங்களது பகுதிக்குள் யானைகள் புகுந்தள்ளது எனத் தெரிவித்த வண்ணமேயுள்ளார்கள்.

இவ்விடயம் பற்றி வனஜீவராசிகள் திணைக்களத்தின் அரிகாரிகளுக்கு நான் கூறினாலும் அவர்களும் ஏனோ தானோ என்றுதான் உள்ளார்கள் இதற்கென 'வன ஜீவராசிகள் என்ற திணைக்களமே உள்ளது' இவர்கள் விழிப்புடன் செயற்பட்டால் யானைகளை கட்டுப்படுத்தலாம் எமது பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தள்ளன என்று அவர்களுக்குத் தெரிவிப்பதற்கு நான் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டால் அவர்கள் பதிலளிக்கின்றார்களில்லை. அது ஏன் எனத் தெரியாதுள்ளது.

யானைகளைச் சுடுவதற்கும் அதிகாரமில்லை பொலிஸாரோ இராணுவத்தினரோ யானைகளுக்குச் சுட முடியாது ஒரு தோட்டா சுட்டாலும் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். யானை வெடிகள் வழங்குவதோ அல்லது மின்சார வேலிகள் அமைப்பதோ என்பது இப்பிரதேசத்திற்கு வேண்டாத காரியாம் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் யானைகளை உரிய முறையில் பிடித்துக் கொண்டு சரணாயலங்களில் விடுவதற்கு ஏன் தயங்கு கின்றார்களோ என்பது தெரியாமலுள்ளது.

காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் வருவதனைக் குறைக்க நீண்ட காலத் திட்டமாக 56 கிலோமீற்றர் சுற்றளவுள்ள இப்பிரதேசத்தினைச் சுற்றி 150,000 இற்கு மேற்பட்ட பனை விதைகளை நட்டால் எதிர்காலத்தில் யானைகளின் ஊடுருவலைக் குறைக்கலாம்' என்றார்.

வருடாந்தம் வெள்ள அனர்த்தத்திற்குள் உட்படும் இந்த பிரதேசத்தில் எதிர்வரும் மாதங்களில் கடும் மழை பெய்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அவ்வேளைகளில் தாழ்வான பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பபக வெளியேற்றுதல் மற்றும் அவர்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர், உணவு மருத்துவம் போன்றன சீராக வழங்குவது பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த முகாமைத்துவ உதவியாளர் த.துஷியந்தன், களுவாஞ்சிகுடி மின்சார பாவனையாளர் காரியாலய பொறுப்பாளர் கே.அனுசாந், நீர்பாசனத் திணைக்களத்தின் நவகிரிப் பிரிவு பொறியியலாளர் எம்.மயூரன் மற்றும் அக்ரட் நிறுவன அதிகரிகள் பொலிசார் இராணுவத்தினர் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .