2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கோட்டைக்கல்லாறு பாலத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 07 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்,வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமத்திக்கப் பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் அறிய வருவதாவது ,

மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு பாலத்தில் தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மேதிக் கொண்டத்தில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பஸ்ஸூம் மட்டக்களப்பிலிருந்து காரைதீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவரும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

மேட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் இதில் பலத்த காயங்களுக்குள்ளாகி பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாகவும் பெரியகல்லறு மாவட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ருதேசன் தெரிவித்தார்.

காயமடைந்தவர் காரைதீவினைச் சேர்ந்த 56 வயதுடைய தேவராஜன் என அடையாளம் காணப் பட்டுள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .