2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 08 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'பாதுகாப்பான புலம்பெயர்தலும் மனித வியாபாரத்தை தடுத்தலும்' எனும் செயற்றிட்டத்தை மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகம் முன்னெடுத்து வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் புலம்பெயர்ந்து சென்ற பெண்களின் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்களையும் கரித்தாஸ் எகெட் நிறுவனம் வழங்கி வருகின்றது.

இந்த கற்றல் உபகரணங்களை  வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நாவற்கேணி கண்ணகி பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

இதில் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன்,  பொறுப்பாளர் க.திசாந்தி, நிறுவக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ச.மைக்கல், ஊக்குவிப்பாளர் சி.பூஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும்,  மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீகண்ணகி பாலர் பாடசாலை, கருவேப்பங்கேணி விபுலானந்த வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்கும் தரம் 01 முதல் தரம் 11 வரையான அனைத்து பாடங்களுக்கும் 45,000 ரூபா  பெறுமதியான வினாவிடைப் புத்தகங்கள் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .