2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் ஜனன நூற்றாண்டு விழா

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார்


தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் ஜனன நூற்றாண்டு விழா இன்று வெள்ளிக்கிழமை (9) காலை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு தனிநாயகம் அடிகள் ஜனன நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இவ்விழா நாளையும் நடைபெறவுள்ளது.

புலவர்மணி ஏ.பெரியதம்பி பிள்ளை அரங்கில் விழா ஏற்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் ஆரம்பமான இந்த விழாவில் சமய பிரமுகர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கல்வி அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த ஜனன நூற்றாண்டு விழாவில் தமிழ் தூது தனிநாயகம் அடிகளார் பற்றிய நினைவுரைகள் மற்றும் ஆய்வுகள், நடனம், பண்பாட்டு நடனம், விவாத அரங்கு என்பன நடைபெறவுள்ளன.

இன்றைய ஆரம்ப அரங்கில் தனிநாயகம் பற்றிய உரைகள் கவியரங்கு உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .