2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யானை தாக்கியதில் ஒரு படுகாயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


யானையின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் சாந்திபுரம் கிராமத்தில் வசித்து வந்த 40 வயதுடைய க.சண்முகநாதன் என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுபற்றி தெரியவருவதாவது, குறிப்பிட்ட நபர் சாந்திபுரம் கிராமத்தில் தேனீர் கடையை நடாத்தி வருகின்றவர். வழமைபோல் அதிகாலையில் ரொட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இவரை யானை தாக்கியுள்ளது.

யானை வருவதாக அயலவர்கள் கூக்குரலிட்டுள்ளதனை அடுத்து குறித்த நபர்  வீதிக்கு சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக யானை தன்னை நெருங்கி வருவதைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்த வேளை கட்டை ஒன்றின்மேல் மோதி வீழ்ந்துள்ளார். இவ்வேளையில் யானை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளது.

யானையின் தாக்குதலினால் கால், கை மற்றும் மார்பு எலும்புகள் உடைந்துள்ளதுடன், காயங்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த மாதமும் இப்பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகள், சேனைப்பயிர்ச செய்கைகளையும் யானைகள் துவம்சம் செய்துள்ளன. இதன் காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது பெரும்போக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடையே பீதி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவின் கொச்சிக்காய்சேனை எனும் கிராமத்தில் வீடுகளையும், வீட்டுத் தோட்டங்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .