2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு வாவியில் இறால் அறுவடை செய்வதில் மீனவர்கள் ஆர்வம்

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு வாவியில் இறால் அறுவடை செய்வதில் மீனவர்கள் இன்று சனிக்கிழமை காலை அதிக ஆர்வம் செலுத்தினர்.

மாரி காலம் ஆரம்பமாகியுள்ளதனால் காட்டு வெள்ளத்தின் காரணமாக வாவியின் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால் இறால், நண்டு மற்றும் மீன்கள் அதிகம் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கல்லடிப் பாலம், கோட்டமுனைப் பாலம் மற்றும் புதுப்பாலப் பிரதேசங்களில் அதிக இறால் பிடிபடுவதாகவும் ஒரு கிலோ ரூபாய் 400 முதல் 1000 விற்கப்படுவதாகவும் இவ்விலையானது இறாலின் தரத்தைப் பொறுத்து வேறுபடும் என்றும் தெரிவித்தனர்.

வாவித் தொழில் மீனவர் ஒருவர் ஒருநாளைக்கு 4 கிலோ முதல் 6 கிலோ வரை இறால் பிடிப்பதாகவும் இக்காலங்களில் தாம் சந்தோஷமாக தொழிலில் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு உல்லாசப் பிரையாணிகள் அதிகம் மட்டக்களப்பிற்கு வருவதனால் ஹோட்டல் உணவுகளான இறால் மற்றும் நண்டு என்பனவற்றிக்கு  அதிக கிராக்கி காணப்படுன்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .