2025 மே 02, வெள்ளிக்கிழமை

கோட்டமுனைப் பாலத்தில் தேங்கும் நீரை ஆற்றில் விடுவதற்கான வேலைகள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 10 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலையில் மட்டக்களப்பு நகர வீதிகளில் ஏற்படும் வெள்ளத்தை தடுப்பதற்காக வீதி வடிகான் அமைக்கும் வேலைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு கச்சேரி முதல் பிரதம பொலிஸ் நிலையச் சுற்றுவட்டம் வரை இத்திட்டம் இடம்பெறுவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

இத்திட்டத்தில் கீழ,; கோட்டமுனைப் பாலத்தில் வெள்ள காலத்தில் தேங்கும்  நீரை ஆற்றினுள் அனுப்புவதற்கான வேலைகள் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்களின் பிரதிநிதிகள் மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளதனால் மட்டக்களப்பு நகர அழகுபடுத்தும் திட்டத்தில் மீதியாகவுள்ள வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .