2025 மே 01, வியாழக்கிழமை

மாநாட்டை முன்னிட்டு மாபெறும் கண்காட்சி: மட்டு. பெண்களும் பங்கேற்பு

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


பொதுநலவாய மாநாடடை முன்னிட்டு கொழும்பு பத்தரமுல்லையில் நடைபெறவுள்ள மாபெரும் கைவினைக் கண்காட்சியில் மட்டக்களப்பு  பெண்களின்  கைவினை பொருட்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல்; 17 ஆம் திகதிவரை கொழும்பு – பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியில் கைவினை பொருட்களின் கண்காட்சியொன்று நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் கைவினைக் கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினால் செய்யப்பட்ட கைவினை உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்படுத்தவுள்ளதாக கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.கங்காதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் இந்த அமைப்பின் மூலம் யுத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களினைக் கொண்டு கைவினைப் பொருட்கள்; உற்பத்தி  செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பெண்களின் உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் பார்வையிடுவதற்குமான ஒரு நல்ல சந்தரப்பமாக இதனைக் கருதுகின்றேன்.

கிழக்கில் யுத்தத்தினால் பாதிப்புற்று கைவினை செயற்திட்டத்தில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்குமான ஒரு வாய்ப்பாகவும் இதனைக் கருதுகின்றேன்.

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு நடைபெறும் இம்மாபெரும் கைவினைக் கண்காட்சியில் இலங்கையில் நாலாபக்கமும் இருந்து கைவினை உற்பத்திப் பொருட்கள் வரவுள்ளன.

இதில் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு அமைப்புக்களில் எமது அமைப்பும் ஒன்றாகும்'  என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .