2025 மே 02, வெள்ளிக்கிழமை

தமிழ் தூது தனிநயாகம் அடிகளாரின் ஜனன நூற்றாண்டு விழா நிறைவு

Kogilavani   / 2013 நவம்பர் 10 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான தமிழ் தூது தனிநயாகம் அடிகளாரின் ஜனன நூற்றாண்டு விழா நேற்று சனிக்கிழமையுடன் (9) நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு தனிநயாகம் அடிகளாரின் ஜனன நூற்றாண்டு விழா, சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இறுதி நாள் அமர்வு மகா வித்துவான் இலக்கிய கலாநிதி எக்;ஸ்.சி.நடராஜா அரங்கு மற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அரங்கு ஆகிய அரங்குகளிலும் நடைபெற்றன.

இந்த விழாவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிசாம், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணி;ப்பானர் கலாநிதி எம்.பிறேம்குமார் உட்பட சமய பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், கல்வி அதிகாரிகள் மாணவர்கள், விழா ஏற்பாட்டுச் சபையின் பிரதிநதிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இவ் விழாவில் தமிழ் தூது தனிநயாகம் அடிகளார் பற்றிய நினைவுரைகள் மற்றும் ஆய்வுகள் நடனம், பண்பாட்டு நடனம், விவாத அரங்கு, கவியரங்கு என்பன நடைபெற்றதுடன் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் தயாரித்த தனிநாயகம் அடிகளார் பற்றிய பாமாலை இறுவெட்டும் வெளியீட்டு வைக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .