2025 மே 01, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன், ரி.எல்.ஜவ்பர்கான்


'சமூகத்தில் தடைகளை தகர்ப்போம் கதவுகளைத் திறப்போம்' எனும் தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

சர்வதேச வலது குறைந்தோர் தினத்தையொட்டி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறன் சிறுவர்கள் முத்து கோர்த்தல், தடை தாண்டல், நீர் நிரப்புதல் உள்ளிட்ட ஏழு விளையாட்டு போட்டிகளில்; பங்குபற்றினர்.

ஓசாணம், மென்கபே, புகலிடம், தரிசனம், சுகைறா பாடசாலை, வாழ்வகம் உள்ளிட்ட 10 அமைப்புகளை சேர்ந்தோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர்.

இப்போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு மட்டக்களப்பு அரச அதிபர் பி.எஸ்.ஏம்.சாள்ஸ், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.குருநாதன் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவில் ஹெண்டிகப், கெமிட் என்பன இணைந்து இப்போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தன.

இதேவேளை, காத்தான்குடி ஷாஹிறா விசேட பாடசாலையில் விசேட வைபவமொன்றும்; இடம்பெற்றது.

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நிலைய தலைவர் எம்.எச்.பஷீர் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் எம்.இஸ்மாலெப்பை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

வலது குறைந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .