2025 மே 01, வியாழக்கிழமை

தாண்டவன்வெளியில் மனநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிகழ்வு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனநோயாளர்களுக்கான சிகிச்சையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு, தாண்டவன்வெளி புனித வளனார் வயோதிபர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மாவடிவேம்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தின் வைத்தியக் கலாநிதி யூடி ரமேஸ் ஜெயக்குமார் பாதிக்கப்படவர்களுக்கான சிகிட்சைகளை வழங்கினார்.

அண்மையில் ( 01.12.2013) 11 வயோதிபர்களுக்கு கண்சத்திரசிகிட்சை மற்றும் கண்வில்லை பதித்தல் இடம்பெற்றதாக இல்லப் பொறுப்பாளர் அருட்சகோதரி கிளரட் மரியா தெரிவித்தார்.

இவ் இல்லத்தில் 26 ஆண்களும் 27 பெண்களுமாக 53 பேர் முழு வசதிகளுடன் பராமரிக்கப்படுவதாக அருட்சகோதரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .