2025 மே 01, வியாழக்கிழமை

ஸ்ரீ.சு.க.இன் மட்டு.அமைப்பாளர்கள் அம்பாறைக்கு விஜயம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சயின் மட்டக்களப்பு மாவடத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை (13) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதியின் அலோசகருமான அருண் தம்பிமுத்து, பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன்-இராசமாணிக்கம் ஆகியோர் சென்றிருந்தனர்.

இவர்கள் வட்டமடு காணிப்பிரச்சனை, இந்து ஆலயங்களின் அபிவிருத்திகள், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது, அம்பாறை மாவட்டத்திலிருக்கின்ற காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை, மர்மமான முறையில் கால்நடைகள் இறக்கின்றமை, காட்டு யானைகளின் தாக்கம், தொடர்பாக பல  கலந்துரையாடல்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுடன் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாகவும் அப்பகுதி பொதுமக்கள் மேற்படி அமைப்பாளர்களிடம் கூறினர்.

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு காணப்படும் பிரச்சனைகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்த்துத் தருவதற்கு தான் முயற்சிப்பதாக இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதியின் அலோசகருமான அருண் தம்பிமுத்து அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .