2025 மே 01, வியாழக்கிழமை

கட்டாக்காலி மாடுகளினால் சாரதிகளுக்கு ஆபத்து

Kanagaraj   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதிகளில் உள்ள கட்டாக்காலி மாடுகளினால் வாகன சாரதிகளும் பாதசாரிகளும் பெரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.

கட்டாக்காலி மாடுகள் வீதிகளின் பாதசாரிகள் கடவைகள், வீதியின் மத்தியில்; நிற்பதோடு மட்டுமல்லாமல் அவ்விடங்களிலேயே மாலை வேளைகளில் ஓய்வெடுக்கின்றன.

வாகனங்கள் கவனயீர்ப்பு ஒலி எழுப்பியும் அசையாமல் இருக்கின்றதனால் பயணம் செய்வோர் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகின்றனர்.

இம் மாடுகளின் தொல்லையை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .