2025 மே 01, வியாழக்கிழமை

மூவின இளைஞர், யுவதிகளுக்கான வதிவிடப் பயிற்சி முகாம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட மூவின இளைஞர், யுவதிகளுக்கான வதிவிடப் பயிற்சி முகாம் 04 நாட்களாக நடைபெற்றது.

சர்வோதய சாந்தி சேனா அமைப்பின் ஏற்பாட்டில், உனவட்டுன கிராமத்தில் இந்த வதிவிடப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதன்போது சிங்கள, தமிழ் இளைஞர் யுவதிகள் தத்தமது கலை, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி தமது கலாசார புரிதலையும் சகவாழ்வையும் உறுதிப்படுத்தினார்கள். பள்ளிவாசல்களில் தொழுகையில்; ஈடுபடும் முறைகளை முஸ்லிம் இளைஞர்; செய்து காட்டினார்கள். மேலும் கருத்துப் பரிமாற்றம், நாடகம், குழுச்செயற்பாட்டு நிகழ்ச்சிகள் என்பனவும் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .