2025 மே 01, வியாழக்கிழமை

அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் சடலம் தோண்டியெடுப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 19 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


காத்தான்குடியில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம்  இன்று வியாழக்கிமை  காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த பக்கீர் முகைதீன் மஜீட் (வயது 65) என்பவரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர் கடந்த 12.12.2013 அன்று தனது வீட்டில் மரணமடைந்தார். இவரின் சடலம் அன்றையதினமே புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளியால், மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் இவரின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத  பரிசோதனை செய்யுமாறு காத்தான்குடி பொலிஸாரிடம் இவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த விடயத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு காத்தான்குடி பொலிஸார் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் என்.எம்.அப்துல்லா சடலத்தை தோண்டி எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதன்படி குறித்த வயோதிபரின் சடலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான்  என்.எம்.அப்துல்லா இன்று வியாழக்கிழமை (19) முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிவான்  என்.எம்.அப்துல்லா அப்துல்லா பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டது.

இது தொடர்பனான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள்: ரீ.எல்.ஜவ்பர்கான்)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .