2025 மே 01, வியாழக்கிழமை

மாவடிமுன்மாரிக் கிராமத்திற்கு மின் விநியோகம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிமுன்மாரிக் கிராமத்திற்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மின் விநியோகிக்கப்பட்டுள்ளது.

10 மில்லியன் ரூபா செலவில் இப்பிரதேசத்திற்கான மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஞா.பேரின்பத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி; அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் மின் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் களுவாஞ்சிக்குடி பாவனையாளர் பிரிவின் பொறுப்பதிகாரி கே.அனுசாந், கிராம சேவை உத்தியோகஸ்தர்  எஸ்.கருணாநிதி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வே.ஜெகதீசன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிப்பளைப் பிரிவின் அமைப்பாளர் எஸ்.கிரேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கிராமம் ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து  இதுவரை காலமும்  குப்பி விளக்குகளில் வசித்து வந்த தங்களுக்கு  தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக மாவடிமுன்மாரி கிராம மக்கள்  தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .