2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கைகளினால் இறால்கள் பிடிப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு வாவியின் அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் வலைகளைப் பாவிக்காமல் கைகளினால் இறால்களைப்; பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைகளினால் இறால்களைப் பிடிப்பதை மாணவர்கள் உட்பட பலர் தங்களது பொழுதுபோக்குத் தொழிலாகவும் கொண்டுள்ளனர்.

கொத்துக்குளம் வாவியின் அருகில் மணல் அகழ்வதினால் ஏற்படும் குழிகளில் மாரி காலங்களில் நீர் தேங்கி நிற்பதோடு, ஆற்று நீரும் வந்து சேர்வதனால் அதனுடன் இறால்களும் மீன்களும் வந்தடைகின்றன. நீருக்கு அடியிலுள்ள இறால்கள் இரு கைகளினாலும் நீரினுள் அமிழ்த்திப் பொத்திப் பிடிக்கப்படுகின்றன.

இதன்போது இறாலின் முன்பக்கமுள்ள ஊசி போன்ற முள் கைகளைக் குத்துவதாகவும் இதனால் வலி ஏற்படுவதாகவும் மாணவர்கள் கூறினர். இருப்பினும்  இதைப் பொருட்படுத்தாது இறால்களைப்; பிடிப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 2 கிலோ படி இறால்களைப் பிடிக்கப்படுகின்றனர்.  இவ்வாறு பிடிக்கப்படும் இறால்கள் ஒரு கிலோ 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மாணவர்கள் கூறினர்.

கைகளினால் இறால்களைப் பிடிப்பதன் மூலம் அதிலிருந்து பெறப்படும் பணத்தை தனது தனியார் வகுப்புச்; செலவிற்கும் ஏனைய கல்விச் செலவிற்கும் பயன்படுத்துவதாக மாணவர் ஒருவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .