2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பத்து சதவீதமானவர்கள் மாத்திரமே உயர் கல்விக்கு செல்கின்றனர்: பி.எஸ்.எம்.சாள்ஸ்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்பொடி சசிகுமார்

முதலாம் ஆண்டிற்கு எந்தப் பாடசாலையில் பிள்ளைகளை சேர்ப்பது என்பதில் கூடிய கரிசனை கொண்டு சேர்க்கப்படுகின்ற பிள்ளைகளில் 10 வீதமானவர்கள் மாத்திரமே உயர் கல்விக்குச் செல்கின்றனா.; மிகுதி 90 வீதமானவர்களும் எந்தவித ஏற்பாடுகளுமின்றி நடு வீதியில் விடப்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக தொழில் உருவாக்கம் மேம்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (21) நடைபெற்ற தொழில்ச் சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'தேவைக்கு ஏற்ப தொழில் பயிற்சிநெறிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். காலத்தின் தேவைக்கு ஏற்ப தொழில் பயிற்சிநெறிகளை நெறிப்படுத்த வேண்டும்.

பெற்றோர் முதலாம் ஆண்டிற்கு எந்தப் பாடசாலையில் தமது பிள்ளைகளை சேர்ப்பது என்பதில் கூடிய கரிசனை காட்டுவது போன்று, தொழில் கல்வியினை பெறுவதற்கு கரிசனை காட்டுவதில்லை.

எமது கல்வித் திட்டத்தல் உள்ள குறைபாட்டினால் முதலாம் ஆண்டில் சேர்க்கப்படும் பிள்ளைகளில் 10 சதவீதமானோர் மாத்திரமே உயர் கல்விக்குச் செல்கின்றனர். மிகுதி 90 வீதமானவர்களும் எந்தவித ஏற்பாடுகளுமின்றி நடு வீதியில் விடப்படுகின்றனர்.

உயர் கல்விக்குச் செல்ல முடியாத பிள்ளைகளுக்கு தொழில் கல்வியினை பெற்றுக்கொடுக்க முதலாம் ஆண்டில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு காட்டும் அத்தனை கரிசனைகளையும் காட்ட வேண்டும்.

தொழில் திறனையும் தொழில் கல்வியினையும் பெற்றுக்கொடுக்க உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சு உதவ வேண்டும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .