2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டு. பட்டதாரி பயிலுனர்களுக்கு மாவட்டத்துக்குள்ளேயே நியமனம் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக உள்ளீர்க்கப்பட்டவர்களை மாவட்டத்துக்குள்ளேயே நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்ற மட்டக்களப்பு பயிலுனர் பட்டதாரிகளையும் மாவட்டத்துக்குள் உள்ளீர்க்க மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அவரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பட்டதாரிகள் பலருக்கு வெளி மாவட்டங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சிறு குழந்தைகள் உள்ள பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்கள் உட்பட பல தரப்பினர் இது தொடர்பில் பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பிரதியமைச்சர் கலந்துரையாடியுள்ளதாகவும் வெளி மாவட்டங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு கிழக்கு மாகாணசபை ஊடாக நியமனங்களை வழங்க முதலமைச்சர் பிரதியமைச்சரிடம் உறுதியளித்துள்ளதாகவும் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார்.

குறிப்பாக மாவட்டத்துக்குள் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கையெடுப்பதாக முதலமைச்சர் பிரதியமைச்சரிடம் தெரிவித்துள்ளதாகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .