2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஏறாவூரிலுள்ள கடையில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் நகர கடைத் தெருவில் உள்ள கடை ஒன்று உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள பல சரக்குக் கடை ஒன்றிலேயே நேற்று புதன்கிழமை (26)  நள்ளிரவு இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

இந்தக் கடையிலிருந்து  கையடக்கத் தொலைபேசிகளுக்கான மீள்நிரப்பு அட்டைகள்;, சிகரெட்டுக்கள், பணம் ஆகியனவே திருட்டுப் போயுள்ளன. 
150,000 ரூபா பெறுமதியான  மீள்நிரப்பு அட்டைகளும் 300,000 ரூபா  பெறுமதியான சிகரெட்டுக்களும் 100,000 ரூபா பணம் ஆகியனவே திருட்டுப் போயுள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையின் கூரையை அகற்றி விட்டு அதன் ஊடாக உள்நுளைந்து சென்றே இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

திருட்டு இடம்பெற்றுள்ள கடைக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸார் இந்த திருட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .