2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காத்தான்குடியில் இருவேறு இடங்களில் கொள்ளை

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் இன்று(27)அதிகாலை பலசரக்கு கடை ஒன்றிலும் மற்றும் பள்ளிவாயல் ஒன்றில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவு, புதிய காத்தான்குடி பதுறியா வீதியிலுள்ள எம்.கலீல் என்பவருக்கு சொந்தமான பல சரக்கு கடையொன்று இன்று அதிகாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காத்தான்குடி 6ஆம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள செயின் மௌலானா பள்ளிவாயல் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியலொன்றும் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் எம்.மாஹீர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .