2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கடல் தொழிலாளர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளும், காப்புறுதியும் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கடல் தொழிலாளர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளும், காப்புறுதியும் கட்டாயமாக்கப்பட:டுள்ளதாக மட்டக்களப்பு கடல்தொழில் நீரியல் வள உதவிப் பணிப்பாளர் ரீ.ஜோர்ச் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1693 இயந்திரப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இவற்றில் 1223 வெளியிணை இயந்திரப்படகுகள், 360 ஆழ்கடல் இயந்திரப்படகுகள், 70 ஒருநாள் இயந்திரப்படகுகளும், என உள்ளன.

இவற்றில் இருவர் மீன்பிடிகளுக்காக செல்கின்றனர். இவர்களுக்காக உயிர்காப்பு அங்கிகள் கட்டாயமாகும். அதேநேரம் படகுக்கும் பயணிப்பவர்களுக்கு காப்புறுதியும் கட்டாயமாகும்.

எந்தவிதமான காப்புறுதியும் இல்லாது மீன்பிடியில் ஈடுபடும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நஸ்டஈடு வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், நஸ்டஈடு வழங்க முடியாத நிலையும் காணப்படுகிறது. கடந்த காலங்களில் 13 பேர் வரை மீன்பிடியில் ஈடுபட்டவேளை உயிரிழந்துள்ளனர்.

மீனவர்களுக்கான காப்புறுதிகள் மேற்கொள்ளப்படும்போது, 115,000 ரூபாய் இழப்பீடு மரணச்சடங்குச் செலவுடன் வழங்கப்படுகிறது.
அதேநேரம் மீன்பிடிக்குச் சென்று காணாமல் போகும் மீனவர்களுக்கு அவர்கள் வீடு திரும்பும் வரையில் மாதாந்தம் 5000 ருபாய்களும் வழங்கப்படுகின்றன.

எனவே மீனவர்கள் தமது காப்புறுதியை கட்டாயமாக மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .