2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மேட்டு நில மைய்யவாடி நிர்மாணம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் மழைக் காலத்தில் ஜனாசாக்களை அடக்கம்செய்வதற்கான மேட்டு நில மைய்யவாடி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

புதிய காத்தான்குடி முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமான மைய்யவாடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் நிதியுதவின் மூலம் இந்த மேட்டு நில மைய்யவாடி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தனது மாகாண சபை நிதியிலிருந்து முதல் கட்டமாக இரண்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த மேட்டு நில மைய்யவாடி நிர்மாண வேலைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டார்.

இதன்போது காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர், புதிய காத்தான்குடி முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.றஹீம, அதன் செயலாளர் ஏ.எல்.டீன் பைறூஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .