2025 மே 01, வியாழக்கிழமை

மழை வேண்டி விசேட பிரார்த்தனை

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.முர்ஷிட்


மழை வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் விசேட தொழுகை (ஸலாதுல் இஸ்திஸ்ஹா) இன்று காலை மணிக்கு ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயிலில் இடம்பெற்றது.

விவசாய அமைப்புக்களும் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் ஓட்டமாவடிக் கிளை சமுக சேவைகள் அமைப்பும் இணைந்து இதழள ஏற்பாடு செய்திருந்தன.

தொழுகையில் விஷேட துஆப் பிராத்தனையை ஓட்டமாவடி சிறாஜியா அரபுக் கல்லூரின் முதல்வர் மௌலவி எம்.எம்.தாஹிர் (ஹாமி) நடத்தினார்.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் மாதத்திற்கான மழை வீழ்ச்சி போதியளவு பெய்யாமையால் இப் பகுதி விவசாயிகள் வேளான்மையைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .