2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீடமைப்புப் பகுதியிலிருந்து மிதிவெடி மீட்பு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடுவில் மிதிவெடியொன்றை தாம் மீட்டெடுத்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
 
கொடுவாமடுவில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வீடமைப்புப் பகுதியிலிருந்தே இந்த மிதிவெடி இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
 
நிலத்தைத் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது இந்த மிதி வெடி வெளிக்கிளம்பியதை கிராமத்தவர்கள் தனக்கு தெரிவித்ததாகவும் அதன் பின்னர் கரடியனாறு பொலிஸார் வரவழைக்கப்பட்டதாகவும் கொடுவாமடு கிராம சேவையாளர் எஸ். கோபு தெரிவித்தார்.
 
இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரைக் கொண்டு மீட்கப்பட்ட இந்த மிதி வெடி பழுதுபடாத நிலையில் காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .