2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஓட்டமாவடியில் பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேசத்திலுள்ள இரு  கடைகளிலும் உணவகம் ஒன்றிலுமிருந்து காலாவதியான மற்றும் பழுதடைந்த பொருட்களை கைப்பற்றியுள்ளதாக ஓட்டமாவடி பதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நஷீர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து  குறித்த இரு  கடைகளினதும் உணவகத்தினதும்  உரிமையாளர்களை எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மரக்கறிக்கடை, பழக்கடைக்கடை,  உணவகம் ஆகியவற்றிலிருந்தே  காலாவதியான மற்றும் பழுதடைந்த பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு சிறந்த பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற  நோக்கில் ஓட்டமாவடிப் பிரதேசத்திலுள்ள விற்பனை நிலையங்கள், உணவகங்களில் நேற்று சனிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டன.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கானின் ஆலோசனைக்கு அமைய, பதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நஷீர் தலைமையில் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.ஆர் ஹக்கீம் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோரே இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .