2025 மே 01, வியாழக்கிழமை

நல்லெண்ணம் படைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


தங்களின் வாழ்வாதாரத்திற்கு  உதவி புரியும் நல்லெண்ணம் கொண்டோர்களுக்கு வருடாந்தம் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வயோதிபர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித வளனார் முதியோர் இல்லத்திலுள்ளவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, அந்த இல்ல கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இல்லப் பொறுப்பாளர் அருட்சகோதரி மரியா கிளரட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இல்ல நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வயோதிபர்கள் மற்றும் ஊழியர்களினால், நல்லெண்ணம் கொண்டோர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலான கலை நிகழ்வுகள் நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .