2025 மே 01, வியாழக்கிழமை

ஆய்வுகூடங்கள், வைத்தியசாலைகள், மருந்தகங்களின் கழிவுகளை அழிக்கத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவிலுள்ள ஆய்வுகூடங்கள், தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும்; கழிவுகளை பிரித்தெடுத்து  அதற்கேற்ப அவற்றை  தீயிட்டு  அழிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

இது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (28) காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இதன்போது ஆய்வுகூடங்கள், தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் கழிவுகளை அகற்றுவது தொடர்பில்  விரிவாக ஆராயப்பட்டது.

கழிவுகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நகரசபையின் சுத்திகரிப்பு ஊழியர்களினால் சேகரிக்கப்பட்டு அவற்றை தரம் பிரித்து தீயிட்டு அழிப்பதென தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஆய்வுகூடங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .