2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மட்டு.போதனா வைத்தியசாலை அபிவிருத்தி குழுவிற்கு ஏழு பேர் புதிதாக நியமனம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்தி குழுவிற்கென 2014ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களாக ஏழுபேரை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், ஆரையம்பதி பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், கொமர்சல் வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எஸ்.மகேந்திரன், சமுக சேவையாளர் தேசகீர்த்தி லட்சுமிகாந்தன், டாக்டர் எஸ்.திருக்கணேசன், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி சண்முகம் இராஜலிங்கம் ஆகியோரே புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் தலைவாராக இராஜன் மயில்வாகனம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான நியமன கடிதங்களை அமைப்பாளர் இராஜன் மயில் வாகனம் ஞாயிற்றுக்கிழமை (29) வழங்கி வைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .