2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முதியோர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியில் உள்ள விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களில் கண் பார்வை குறைவாகவுள்ள முதியோர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை அமைப்பு, பிரான்ஸ் அன்னை தெரேசா சமூக நல நற்பணி மன்றத்தின் ஊடாக இவர்களுக்கு  மூக்குக்கண்ணாடிகளை வழங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்ற இந்த நிகழ்வின்போது 08 முதியோர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

அன்னை தெரேசா சமூக நல நற்பணி மன்றத்தின் ஆலோசகர் எஸ்.ஜெகநாதன், கிழக்கு இந்து ஒன்றிய பொதுச் செயலாளரும், காந்தி சேவா சங்க செயலாளருமான கதிர் பாரதிதாசன், மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற செயலாளர் சாரங்கபாணி அருள்மொழி, உட்பட இன்னும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .