2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மண்முனைத்துறை பாலத்தின் நிர்மாண வேலைகள் முடிவுறும் நிலையில்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பின் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனைத்துறைப் பாலத்தின் நிர்மாண வேலைகள் முடிவுறும் நிலைக்கு வந்துள்ளன.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட பாலங்களை புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழிகாட்டலில் அமைக்கப்படும் இப்பாலம் 2014 மார்ச் மாதம் மக்களின் பாவனைக்கு விடப்படவுள்ளது.

இவ்வளவு காலமும் பாதையில் பயணம் செய்த மக்களுக்கும் மற்றும் படுவான்கரையிலுள்ள விவசாயிகளுக்கும் தங்களது நாளாந்த வேலைகளைச் செய்து முடிப்பதற்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் 410 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 15 மீற்றர் அகலமும் 490 மீற்றர் நீளமும் கொண்ட இப்பாலம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .