2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஓட்டமாவடி பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Super User   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஓட்டமாவடி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் இந்த வரவு செவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மை பயனிக்கக்கூடிய எந்த விடயங்களும் இல்லை என்று சுட்டிக்காட்டி ஆளும் மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மீண்டும் இன்று திங்கட்கிழமை பிரதேச சபையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்டினால் திருத்தப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.எனினும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பிரதேச சபையின் எதிரக்கட்சி தலைவர் எல்.ரீ.எம்.புர்ஹான் வாக்களிப்பில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .