2025 ஜூலை 30, புதன்கிழமை

வசதியற்ற மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 02 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


புத்தாண்டை முன்னிட்டு வவுணதீவுப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டன.

புத்தாண்டை முன்னிட்டு அத்தினத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மாணவர்களின் கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு அமைய வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  07 மாணவர்களுக்கு சைக்கிள்களும் 50 மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் நேற்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை மேற்கு வவணதீவுப் பிரதேச செயலகத்தில் அப்பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வைத் தொடர்ந்து மேற்படி மாணவர்களுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பி.பி.டி.ஆர்.ஓ.நிறுவனத்தின் அனுசரணையுடன் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.  அருள்மிகு சிவன் கோவில் சைவ தமிழ் சங்க அன்பே சிவம் அமைப்பு மற்றும் வவுணதீவுப் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்; அனுசரணையுடன் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .