2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஏறாவூர் பிரதேச செயலகத்தில் முன்மாதிரித் தோட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 02 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


உள்ளூர் கனி வகைகள் மற்றும் மூலிகைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஏறாவூர் நகர பிரதேச செயலக வளாகத்தில் முன்மாதிரித் தோட்டத்திற்கான நடவடிக்கைகள் புத்தாண்டு தினமான நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த முன்மாதிரித் தோட்டத்திற்கான மரக்கன்றுகளை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவும் பிரதேச செயலக ஊழியர்களும் நாட்டினர்.

ஏறாவூர் நகர பிரதேச செயலக வளாகத்தினுள் இடவசதி குறைவாகக் காணப்படுகின்றது. இருப்பினும், தற்போதுள்ள குறுகலான நிலத்தைப் பயன்படுத்தி இந்த முன்மாதிரித் தோட்;டம் மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

இந்தத் தோட்டம் பிரதேச செயலகத்;தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பிரதேசத்திலுள்ள பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் எனவும்  அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .