2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யானை வெடி வெடித்ததில் ஒருவர் காயம்

Kanagaraj   / 2014 ஜனவரி 02 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு,படுவான்கரைப் பகுதியில அமைந்துள்ள விவேகானந்தபுரம் கிராமத்தில் யானை வெடி வெடித்ததில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

35 வயதான கந்தையா-கருணாநிதி என்பவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது விவேகானந்தபுரம் கிரமத்தினுள் இரண்டுக்கு மேற்பட்ட காட்டு யானைகள் சற்று முன்னர் புகுந்துள்ளன.

யாணைகளை விரட்டுவதற்காக தம்மிடமிருந்த யானை வெடியினை குறித்த நபர் கொழுத்தியுள்ளார். அந்த வெடியை வீசுவதற்கு முன்னர் அது கையிலேயை வெடித்துவிட்டது. இதனால் அவரது கை மற்றும் தலை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டள்ளன.

மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தாக்குதல்களும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதோடு கடந்த மாதம் மாத்திரம்காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி 3 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .