2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பொதுசொத்துக்களுக்கு சேதவிளைவிப்பதற்கு கண்டனம்

Kogilavani   / 2014 ஜனவரி 03 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு நகரில் பொதுச்சொத்துகள் மீது இளைஞர்கள் குழுக்கள் இரவு வேளைகளில் மேற்கொள்ளும் தாக்குதல்கள் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலகமாக மட்டக்களப்பு நகரில் உள்ள பொது இடங்களில் இளைஞர்கள் கூட்டம் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதுடன் அவற்றினை களவாடிச்செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, ஊறணி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள லீனர்ஸ் பார்க் பகுதிக்குள் ஒன்று கூடிய சிலர், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளை உடைத்துள்ளதுடன் அழகுபடுத்த அமைக்கப்பட்டிருந்த மின்குமிழ்கள் சிலவற்றையும் களவாடிச்சென்ற சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் அத்துமீறல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த வேலைப்பழுக்கள் மத்தியில் உள்ள மக்களின் நலன் கருதி தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நகர அழகுபடுத்தும் வகையிலான வேலைகளின் கீழ் நகரில் இவ்வாறான பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதுவரையில் இவை மக்களின் பாவனைக்கு விடப்படாத நிலையில் அவை சேதமாக்கப்பட்டுள்ள சம்பவமானது மாவட்டத்தின் எதிர்கால நிலையினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

குறிப்பாக மக்களின் ஆற்றல் படுத்துகைக்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காப் பகுதியில் இரவு வேளைகளில் இளைஞர் குழுக்கள் மேற்கொள்ளும் இவ்வாறான அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறான இளைஞர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .