2025 மே 01, வியாழக்கிழமை

புதிய சந்தைத் தொகுதிக்கான நிர்மாண வேலைகள் ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஜனவரி 03 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்
 
மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிய சந்தைத் தொகுதிக்கான நிர்மாண வேலைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
மட்டக்களப்பு நகர உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி  நிர்மாணிக்கப்படும் இச்சந்தை முதன் முதலாக இரவுநேர சந்தையாக இது இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
பொருளாதார அபிவிரத்தி அமைச்சின் கிழக்கின் உதயம் திட்டத்தில் கிழக்கு மாகாணசபையின் புற நெகும – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான கிராமிய, சிறு நகர அபிவிருத்தி முனைப்பின் கீழ் 4 மில்லியன் செலவில் இச் சந்தை கடைத் தொகுதி அமையவுள்ளது.
 
முன்பு நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தை தொகுதிக்கு சமாந்தரமாக 30 கடைத் தொகுதிகளுடன் முன்புறம்  வாகன தரிப்பிட வசதிகளுடன் இக் கட்டிடம் அமையவுள்ளது.
 
தம்புள்ளை, நுவரெலியா, கண்டி மற்றும் மஹியங்கனை போன்ற நகரங்களிற்கு சென்று மரக்கறிகளைக் கொள்வனவு செய்து வரும் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை அதிகரிப்பதற்கு இது ஏதுவாய் அமையும் என மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .