2025 மே 01, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டும் செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 07 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டும் செயற்றிட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது  தொடர்பில்  அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் திணைக்களத் தலைவர்களுக்குமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மண்முனை வடக்கு மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதலில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதம்  உட்பட குறைபாடுகள் தொடர்பில் கருத்தரங்கில் கலந்துரையாடியதாக நவஜீவன நிறுவகத்தின் ஸ்தாபகத் தலைவர் குமாரினி விக்கிரமசூரிய தெரிவித்தார்.

அமெரிக்க உதவித்திட்டத்தின் நிதியுதவியில்; கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பலப்படுத்தும் திட்டம் 2013ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டு முடிவடையவுள்ளது.

கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இந்தத் திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்.ஓ.எச். நிறுவனமும் திருகோணமலையில் லீட்ஸ் நிறுவனமும் அம்பாறையில் டியஸ் லிங் நிறுவனமும் பங்காளிகளாக  செயற்படுகின்றன.

மாவட்ட செயலகத்தின் 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்புப் படி  மட்டக்களப்பு மாவட்டத்தில் 6,392 மாற்றுத்திறனாளிகள் இருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நவஜீவன நிறுவகத்தின் ஸ்தாபகத் தலைவர் குமாரினி விக்கிரமசூரிய,  நவஜீவன நிறுவக திட்ட முகாமையாளர் எஸ்..எம்.கே.பி.நந்தரெட்ண, எல்.ஓ.எச். திட்ட முகாமையாளர் ஏ.சௌந்தரராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .