2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. வைத்தியசாலையில் நடமாடும் அம்பியூலன்ஸ் வண்டிச் சேவை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 13 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக நடமாடும் அம்பியூலன்ஸ் வண்டிச் சேவை நேற்றுமுன்தினம் சனிக்கிழமையிலிருந்து (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த  வைத்தியசாலையின் வைத்தியப் பணிப்பாளர், டாக்டர் க.முருகானந்தன் தெரிவித்தார்.

திடீரென இருதய நோய்க்கு உள்ளாகும்  ஒருவரின் வீட்டுக்குச் சென்று முதலுதவி வழங்கி அவரை பாதுகாப்பாக அழைத்துவரும் வகையில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 0652229154 என்ற அவசர தொலைபேசிச் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அருள்நிதியின் வழிகாட்டலிலான இந்தச் சேவையில் பணியாற்றுவதற்காக தாதியர் குழுவொன்றுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் இந்தச் சேவையை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சு அம்பியூலன்ஸ் வண்டியை வழங்கியுள்ள அதேவேளை, அம்பியூலன்ஸ் வண்டிக்குத் தேவையான உபகரணங்களை ஐ.எம்.ஓ.எச் நிறுவனம் கடந்த 27ஆம் திகதி வழங்கியது.



You May Also Like

  Comments - 0

  • Ash Monday, 13 January 2014 01:26 PM

    Can all the people in Batticaloa District get this service or limited?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .