2025 மே 01, வியாழக்கிழமை

மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தின் கலாசார மண்டபத்தை அமைத்து தருவதாக பிரதமர் உறுதி: முரளிரதன்

Super User   / 2014 ஜனவரி 15 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தின் கலாசார மண்டபத்தை அமைத்து தருவதாக பிரதமர்.தி.மு ஜயரட்ன உறுதியளித்துள்ளார் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

"இந்த ஆலயத்தின் கலாசார மண்டபத்தை அமைத்துத் தரும்படி பிரதமரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் முரளிதரன்,

"இலங்கை வரலாற்றில் சிறப்பான பொங்கல் விழாவை நடத்தியுள்ளோம். இந்த தேசிய  தைப்பொங்கல் விழாவுக்கு பிரதம மந்திரி வருகைதந்து  எங்களைக் கௌரவித்திருப்பது ஒரு பாராட்டக்கூடிய விடயம்.  அதனால் மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் மேலும் பெருமையடைகின்றது என்பதை நான் கூறிக்கொள்கின்றேன்.

ஏனென்றால் முன்பும் அவர் இங்கு வந்திருக்கின்றார். இருந்தாலும் பொங்கல் விழாவுக்கு ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு நேரங்களை செலவிடுவது முடியாத விடயமாகும். இருந்தாலும் எங்களில் அன்புவைத்தவராக தமிழிலே சிறந்த முறையில் பேசக்கூடிய ஒருவராக பிரதம மந்திரி இங்கு வந்திருப்பது ஒரு பாராட்டக் கூடியவிடயம்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .