2025 மே 01, வியாழக்கிழமை

மாணிக்கக் கல் வைத்திருந்த இருவர் கைது

Super User   / 2014 ஜனவரி 16 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் மாணிக்கக் கல் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்துள்ளதுடன் அவர்கள் பாவித்த கார் மற்றும் மாணிக்கக் கல் என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுத் துறையினர் சந்தேகத்தின் பேரில் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் நின்ற காரை சோதனையிட்ட போதே புல்மோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் அவர்கள் பயனம் செய்த காரும் மாணிக்கக் கல் என்று சந்தேகிக்கப்படும் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள மாணிக்கக் கல் என்று சந்தேகிக்கப்படும் பொருள் 260 கிராமும் 990 மில்லிகிராம் இடையுள்ளதாகவும் இவ்பொருளின் பெருமதியை திர்மாணிப்பதற்கு மாணிக்கக் கல் அதிகார சபைக்கு அனுப்பப்படவுள்ளதுடன் சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜே.ஏ.என்.பி. திம்போட்டுமுன தெரிவித்தார்.

மாணிக்கக் கல் என்று சந்தேகிக்கப்படும் பொருள் புல்மோட்டை கடற்கரையில் தாங்கள் புறக்கியதாகவும் வாழைச்சேனையில் இருக்கும் ஒருவரிடம் காட்டுவதற்காக வந்ததாகவும் ஆரம்பக் கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .