2025 மே 01, வியாழக்கிழமை

ஆரையம்பதி மகா வித்தியாலயம் ஆண், பெண் அலகுகளாக பிரிவு

Kogilavani   / 2014 ஜனவரி 17 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கலவன் பாடசாலையாக இயங்கிவந்த மட்டக்களப்பு, ஆரையம்பதி மகா வித்தியாலயமானது வியாழக்கிழமை முதல் ஆண், பெண் தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள இப்பாடசாலை கடந்த இருபது வருடங்களாக கலவன் பாடசாலையாக இயங்கிவந்தது. இந்நிலையில், ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கும் முயற்சிகள் பலவாறு மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதற்கமைவாக நேற்று வியாழக்கிழமை இப்பாடசாலையின் 1-9 வரையான வகுப்புகள் தனித்தனிப்பிரிவுகளாக உத்தியோகப்பூர்வமாக பிரிக்கப்பட்டன. இவ்வகுப்புகள் பாடசாலையின் வளாகத்தினுள்ளே இயங்கவுள்ளது.

ஆண் பெண் பாடசாலையாக மாற்றும் வைபவம் நேற்று(16.1.2014) நடைபெற்ற போதே மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம் மேற்கண்டவாறு கூறினார்.

ஆரையம்பதி கோட்டக்கல்வி அதிகாரி ஆர்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிசாம் உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஆண்கள் பெண்கள் என தனித்தனி பாடசாலைகள் உருவாக்கப்பட்டதன் பின்னரே கல்வித்துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டது.

ஆண்களின் கல்வி வீழச்சியடைந்து பெண்களின் கல்வி சடுதியான வளர்ச்சிப்போக்கினையும் காட்டி நிற்கின்றது.

ஆண்கள் பாடசாலையினை பொறுப்பேற்று வழிநடத்தும் அதிபர் ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடன் ஒவ்வொரு மாணவரையும் தனிப்பட்ட கவனம் எடுத்து கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு ஆக்க பூர்வமான முயற்சி எடுக்கும் போதுதான் ஆண்களின் கல்வியினை வலுவாக்க கூடியதாக அமையும்.

ஆரையம்பதி பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக விடுக்கப்பட்டு வந்த ஆண் பெண் பாடசாலைகளின் தேவைப்பாடு இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது இது வரவேற்க கூடிய சிந்தனையாகும்' என தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, பாடசாலை அதிபர்களான ஏ.தவேந்திரகுமார், திருமதி எஸ்.தங்கவடிவேல் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .