2025 மே 01, வியாழக்கிழமை

வெளிநாட்டுப் புலமைப் பரிசிலுக்கான நேர்முகப் பரீட்சை

Kogilavani   / 2014 ஜனவரி 17 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2014 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் புலமைப் பரிசிலுக்கான இளைஞர்களை தேரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை வியாழக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

இதற்கமைவாக 2014 அம் ஆண்டு புலமைப் பரிசில் வழங்குவதற்கான இளைஞர்களை தேரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தேசிய மட்டத்தில் விரைவில் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .