2025 மே 01, வியாழக்கிழமை

சமயப்பிரமுகர்களின் ஒன்று கூடல்

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சமாதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயப்பிரமுகர்களின் ஒன்று கூடலொன்று மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

சமாதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா மற்றும் நாவற்குடா கண்ணிப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சரவணமுத்து காசுபதி குருக்கள், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி உட்பட சமய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்து சமயத்தைப்பற்றி கிழக்கு பலக்லைக்கழக விரிவுரையாளர் வி.சச்சிதானந்தன், மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஸ் ஸெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி அவர்களும், கிறிஸ்த்தவ மதத்தினை பற்றி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆகியோரும் உரையாற்றினர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .